நகைக்கடையில் விற்பனைக்கு வந்த, வைரம் பதித்த முகக்கவசம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.

இதே போல் மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து கொண்டிருந்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here