மீன்பிடி பயணம் சோகத்தில் முடிந்தது

இங்குள்ள பாண்டாய் தண்டூலிட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள கடலில், மூழ்கி மூன்று சகோதரர்கள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களின் ஒருவர் மூழ்கி மரண்மடந்ததாக  கடல் சார் அமலாக்க நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமர்களின் மீன்பிடி பயணம் சோகத்தில் முடிந்திருக்கிறது.

சண்டகான் மண்டல மலேசிய கடல்சார் அமலாக்கப்பிரிவினர் (எம்.எம்.இ.ஏ) ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்டவரை உணவு விநியோகிப்பாளரான  ஃபட்லிசன் இட்ரிஸ், 20 என அடையாளம் கண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர், அவரது 23 வயது சகோதரர் ,  13 வயதான அவரின் தம்பி ஆகியோர் காலை 9 மணியளவில் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்றனர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஒரு பாறை பகுதிக்கு நீந்த முடிவு செய்தனர், ஆனால், வலுவான நீரோட்டத்தால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அருகில் இருந்த ஒரு மீனவர் இந்த சம்பவத்தைக்கண்டு  இரு சகோதரர்களை மீட்க உதவியிருக்கிறார்.

காலை 11.11 மணியளவில் சண்டகான் தீயணைப்பு மீட்புத் துறைக்குக் கிடைத்த அறிக்கையைத் தொடர்ந்து, காணாமல் போனவரைத்தேடும் பணி மதியம் 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில், மாலை 3.22 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சண்டகான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி மொஹமட் அசார் ஹாமின் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக டச்சஸ் ஆஃப் கென்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here