பூனைக்குத்தீ வைப்பா? ஆதாரம் தேடும் சங்கம்

பூனைக்குட்டியின் மீது  தீப்பிடித்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களைக் கொண்டு வரக்கூடிய எவருக்கும் மலேசியா விலங்குகள் சங்கம் 10,000 வெள்ளி வெகுமதி தரும் என்று அறிவித்திருக்கிறது.

இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில், பகாங்கில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவம் குறித்து முழுமையற்ற தகவல்களைப் பெற்றிருப்பதாகவும்  ஆனால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள எந்த முழுமையான விவரமும் இல்லை என்றும் அது கூறியது.

பூனையின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அதன் மூலம் பூனைக்குட்டி தீப்பிடித்த சம்பவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம்பவம் தொடர்பில்,  எந்தவொரு தனிநபரோ, அல்லது குழுவினரோ ஆதாரப்படுத்தினால் வெ. 3,000 முதல் RM10,000 வரை  சன்மானம் வழங்கப்படும் என்று அச்சங்கம் தெரிவித்திருக்கிறது.

இதன் தொடர்பில், சம்பவம் உண்மை எனக் கண்டறியப்பட்டால் குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சங்கம் கூறியிருக்கிறது.

இந்த சம்பவத்தின் 44 விநாடி வீடியோ , சமூக ஊடகங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, அங்கு பலர் இந்தச் செயலைக் கண்டித்து, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல்களை வாட்ஸ்அப் மூலம் 011-20901097 என்ற எண்ணில் பகிர முன்வரலாம் என்றும் அச்சங்கம் தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here