சிபு: தற்கொலை செய்து கொள்ள ஒரு நபர் கட்டிடத்திலிருந்து கீழே குதிக்கப் போகிறார் என்று நினைத்து பொதுமக்கள் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை அழைத்தனர். ஆனால் அந்த நபர் ஒரு திருடன் என்பது பிறகு கண்டறியப்பட்டது.
வியாழக்கிழமை (ஜூலை 23) காலை 8.12 மணியளவில் ஜாலான் டாக்டர் வோங்கில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற உதவுமாறு காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்திருந்தது.
அந்த நபர் தற்கொலை செய்யப் போவதாக பொதுமக்கள் கருதியதால் காவதுறையினரை அழைத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அந்நபர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முயன்றதாகக் கூறப்படும் அவரை தங்களின் ஏணியைப் பயன்படுத்தி கீழே வருமாறு கட்டாயப்படுத்தினர். பின்னர் அந்த நபர் மேலதிக விசாரணைக்காக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.