உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.45 கோடி பேர் மீண்டனர்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.45 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.43 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here