பழம்பெரும் இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்

பழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் இன்று காலமானார். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்தார்.

80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் இருந்த பண்டிட் ஜஸ்ராஜுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

புகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here