மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60,254 ஆக உயர்வு

மெக்சிகோ சிட்டி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இந்த இரு நாடுகளை தொடர்ந்து பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்து 216 ஆக உயர்வடைந்து உள்ளது. 644 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்ந்து உள்ளது. மெக்சிகோவில் கடந்த வெள்ளி கிழமை பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரம் ஆகவும், உயிரிழப்பு 504 ஆகவும் இருந்தது.

எனினும், அந்த நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் அறிவியல் துறை இயக்குனர் அனா லூசியா கூறும்பொழுது, கடந்த வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கையானது குறைந்து வருகிறது. இதேபோன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here