240 நாடுகளின் பெயரை உச்சரித்து அசத்தும் சிறுமி

தர்மபுரி நெல்லி நகரை சேர்ந்த முனீஸ்குமார்- சவுமியா தம்பதியின் மகள் ஹாசினி(7). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இந்த  சிறுமி, 7 நிமிடங்களில் ஒரே நேரத்தில் 7விதமான ரூபிக்கள் க்யூப் சேர்த்தும், ஹீலா ஹீப் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றியபடி, 240  நாடுகள் மற்றும் அதன் தலைநகரின் பெயரை உச்சரித்தும் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை அங்கீகரித்து யூனிவர்சல் புக், இந்தியன் புக்,  பியூச்சர் கலாம் ஆப் ரெகார்ட்ஸ் ஆகியவை சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி சாதனை புத்தகத்தில் ஹாசினியின் பெயரை சேர்த்துள்ளன. இதுகுறித்து சிறுமி ஹாசினி கூறுகையில், ‘வரும் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ள கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்து  கொண்டிருக்கிறேன். சவாலான விளையாட்டுக்கள் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும்,’ என்றாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here