பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையை நோக்கி சுரங்கம்

இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 170 மீட்டர் தொலைவில் சுரங்கம் ஒன்றின் வாய் பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கண்டறிந்துள்ளனர். அதன் விட்டம் 3 முதல் 4 அடி வரை உள்ளது. இந்த சுரங்கம் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையை நோக்கி 20 அடி நீளத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது.

அது ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா பகுதியில் முடிவடைகிறது. சுரங்கம் தெரியாமல் இருப்பதற்காக அதன் வாய் பகுதியில் ஷகர்கார் மற்றும் கராச்சி ஆகிய பெயர்களால் எழுதப்பட்ட மணற்பைகள் கொண்டு மூடப்பட்டு உள்ளன.

இதுபற்றி எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வால் கூறும்பொழுது, அந்த மணற்பைகளில் பாகிஸ்தானின் குறியீடுகள் உள்ளன. இதில் இருந்தே முறையாக திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு அவர்கள் குழி தோண்டியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

அந்நாட்டு படைகள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்திசைவு மற்றும் ஒப்புதல் இன்றி இதுபோன்ற ஒரு பெரிய சுரங்கம் அமைப்பது என்பது முடியாது. இதுபற்றி பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதுடன், நடந்த குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here