ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் இன்னும் தனது கட்சி குறித்து எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.

கொரோனா காரணமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் தள்ளி போயுள்ளதாக சமீபத்தில் அவரின் அபிமானி கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். ஆனால் தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளதால் தமிழக பிரதான கட்சிகள் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகனிடம் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் ஒரு தேசியவாதி, ஆன்மீகவாதி. அவர் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here