பிரதமரின் பரிந்துரைக்கு ஆதரவு தாருங்கள்

பேறு குறைந்தவர்களுக்கான சமூக நல உதவியை ஆயிரம் வெள்ளியாக உயர்த்துவதற்குப் பரிந்துரைந்திருக்கும் பிரதமருக்கு அமைச்சரவைக் குழு முழு ஆதரவு வழங்க வேண்டுமென எம்டியூசி தலைமைச்செயலாளர் ஜே. சாலமன் பெரிதும் வரவேற்றிருக்கிறார்.

வாய்ப்பு குறைந்தவர்களுக்கும் பேறு குறைந்தவர்களுக்கும் இதுவரை 200. முதல் 300 வெள்ளி வரைதான் சமூகநல உதவி வழங்கப்பட்டு வந்தது.

பேறு குறைந்தவர்களின் சிரமம் குறித்தும் பிரதமரின் பார்வை ஆழமாகப் பதிந்திருக்கிறது. இதைக்கொண்டே அவரின் மக்கள் மீதான பார்வை எத்தகையது என்பதை அறிய முடிகிறது.

இன்றைய வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க பேறு குறைந்தவர்களால் முடியாது. ஆதலால், அப்படிப்பட்டவர்களுக்கு வெ.1000 உதவித்தொகை வழங்க பரிந்துரைத்திருக்கும் பிரதமருக்கு அமைச்சரவை ஆதரவு வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதே போல குறைந்த பென்சன் தொகை பெறுகின்றவர்களுக்கும், நான்காயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோருக்கும் சமூக நலத்திட்டம் உதவ வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here