தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி பலி

நாகர்கோவிலில் தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு குலாலர் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகள் அட்சயா (13) 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அட்சயா தனது வீட்டு மாடியில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சேலை அட்சயாவின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினர் அட்சயாவின் சடலத்தை கீழே இறக்கினர். இதுகுறித்த தகவலின் பேரில் கோட்டாறு காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here