சில தினங்களுக்கு முன் சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்தவர் – மீண்டும் கைது

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்நிலையத்திற்கு 27 வயதுடைய ஆடவர் வழங்கிய புகாரினை தொடர்ந்து போலீசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பழைய கிள்ளான் சாலை பப்ளிக் வங்கி அருகே தனது புரோட்டோன் ஈஸ்வரா காரினை நிறுத்தி வைத்திருந்தாக புகார் வழங்கியிருக்கிறார்.

அப்புகாரில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவ்விடத்தில் காரை நிறுத்தி வைத்து விட்டு இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்று பார்த்தபோது காரை காணாமல் போனதை தொடர்ந்து அந்நபர் போலீசில் புகார் செய்துள்ளார்.

புகாரினை தொடர்ந்து பழைய கிள்ளான் சாலையில் இருக்கும் வாகன பழுது பார்க்கும் கடையை போலீசார் சோதனையிட்ட 3 மோட்டார் சைக்கிள் இன்ஜினை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இன்ஜின் நெம்பர் அழிக்கப்பட்டிருப்பதோடு கார் இன்ஜின் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அக்கார் இன்ஜின் காணாமல் புரோட்டான் ஈஸ்வரா காரின் இன்ஜின் என்பதனை கண்டறிந்தவுடன் அங்கிருந்த 39 வயதான இந்திய ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரின் விவரங்களை ஆராய்ந்தபோது அவர் மீது ஏற்கெனவே 3 குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் சில தினங்களுக்கு முன்பு தான் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்தவர் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. அவரை 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதோடு செக்‌ஷன் 379A கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி ஆகியவை வழங்கப்படும் என்றார்.

பிரிக்பீல்ட்ஸ் மாநில போலீஸ் தலைவர் ஜைருல் நிஜாம் பின் முகமட் ஜைனுடின் கூறுகையில் பொதுமக்கள் சந்தேக நபர் யாரையாவது கண்டால் உடனடியாக 999 என்ற எண்ணில் அழைத்து விவரங்களை வழங்குமாறும் அதே வேளை கோவிட்-19 சங்கிலியை உடைக்க அனைவரும் எஸ்ஓபியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here