9 நாட்களில் 1 கோடி பரிசோதனை; இந்தியா புதிய சாதனை

கொரோனாவை எதிர்த்து இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனையாக நாடுமுழுவதும் 12 லட்சத்துக்கும் (12,06,806) அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்த கொரோனா பரிசோதனைகள் 6.36 கோடியை (6,36,61,060) தாண்டி உள்ளன. கொரோனா பரிசோதனை உள்கட்டமைப்பு நாட்டில் மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதை இது தெளிவாக காட்டுகிறது.ஏப்., 8ல் ஒரு நாளைக்கு வெறும் பத்தாயிரம் பரிசோதனைகளை மட்டுமே நாடு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இது 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த ஒன்பது நாட்களில் மட்டுமே ஒரு கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ‘அதிக அளவிலான பரிசோதனைகள் பாதிப்புகளை விரைவில் கண்டறியவும், சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்து இன்னுமொரு சிகரத்தை இந்தியா தொட்டது’ என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here