புறம்பான குழாய்கள் பொருத்துவதால் வெள்ளமா!

கோலாலம்பூர் மாந்கர் மன்ற  (டி.பி.கே.எல்) அனுமதியின்றி வடிகால் அமைப்பில் நிறுவப்பட்ட பயன்பாட்டுக் குழாய்கள் சமீபத்தில் லெபோ அம்பாங்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களில் ஒன்றாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய பிராந்திய துணை அமைச்சர் டத்தோ டாக்டர் சந்தாரா குமார் கூறுகையில், இந்தப் பிரச்சினை அடையாளம் காணப்பட்டது.  வடிகால் அமைப்பினுள் பல்வேறு வகையான சட்டவிரோத பயன்பாட்டுக் குழாய்கள் நிறுவப்பட்டிருப்பதால் வடிகால் திறன் 30 முதல் 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்றார் அவர்.

மாநகர் மன்றம் இந்த விவகாரத்தை விரைவில் தீர்ப்பதற்கு செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் நீர்ப்பாசன  வடிகால் துறை (டிஐடி), கட்டுமான தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்தும் டிபிகேஎல் ஒப்புதல் இல்லாமல் எந்த நிறுவலும் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த தகவல் கோரப்பட்டுள்ளது.

ருக்குன் நெகாரா 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாட்ட மன்றத்தை அதிகாரப்பூர்வமாக்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக தமது உரையில், ருக்குன் நெகாராவின் ஐந்து கொள்கைகள் ஒற்றுமையை வளர்க்கும் என்றும், நாட்டுக்கு அன்பின் உணர்வைத் தூண்டும் என்றும் சந்தாரா கூறினார்.

செடார் நிறுவனம் மெனாரா பிஜிஎம் கட்டடத்தில்  ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்ச்சியில்  அதன் ஆலோசகர் டத்தோ டாக்டர் டொமினிக் லா ஹோ சாய் மதிப்பீட்டாளராகவும், அழைக்கப்பட்ட ஐந்து ஏற்பாட்டாளர்களாக பெர்லிஸ் முப்தி டத்தோ டாக்டர் மொகமட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின்,  மலேசியாவின் கிறிஸ்தவ கூட்டமைப்புத் தலைவர் பேராயர் ஜூலியன் லீவ் பெங் கிம்,  மலேசியா இந்து சங்கம் உதவி பொதுச் செயலாளர் கவுரி பி.எஸ்.தங்கயா,  தாவோயிசம் சங்கங்களின் கூட்டமைப்பு மலேசியாவின் தலைவர் தாவோஷாங் டான் ஹோ சியோவ் ,  மலேசிய புத்த சங்கம் அறக்கட்டளை, நலத்துறைத் தலைவர் சிங் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here