காலநிலை மாற்றம் குறித்த அச்சம்

கொரோனா பாதிப்புகளை போல் காலநிலை மாற்றத்தையும் கையாண்டு விடுவோமோ என்னும் அச்சம் உள்ளதாக ஐ.நா பொதுச்சபை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதங்களை குறைக்க பல்வேறு நாடுகளிலும் வெவ்வெறு விதமான கட்டுப்பாட்டு விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று உலகளவில் பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவலால் சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நெருக்கடியை போல் காலநிலை மாற்றத்தையும் கையாண்டு விடுவோமோ என அஞ்சுவதாக ஐ.நா பொதுச் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளிடையே நிலவி வந்த ஒற்றுமையின்மையே கொரோனா நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம் என்று குட்டெரெஸ் கூறினார். கூட்டத்தின் போது அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போராட்டம் நடத்தியதால், அந்த சர்ச்சையை கண்டித்தார். முக்கியமான பிரச்னைகளை விட அரசியல் போட்டியில் கவனம் செலுத்துவதாக கூறியவர், உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பின்மை மற்றும் குறுகிய அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தியதும் கொரோனா நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

இது போன்று காலநிலை மாற்றத்தையும் ஆரம்ப காலங்களில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து விடுவோமோ என்னும் அச்சம் தனக்கு நிலவுவதாக குறிப்பிட்டார், மேலும் பாதிப்பு / அவசர காலங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here