ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியரின் கூட்டம் அதிகரித்து வருவதால் ஊட்டி பூங்கா புதுப்பொலிவு பெற்று வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கி உள்ளதால் செப். 1 முதல் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. இந்த முறை இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 15 ஆயிரம் தொட்டிகளில் மெரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பெட்டூனியா செல்பீனியம் உட்பட பல்வேறு வகையான மலர் செடிகள் மாடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் ‘இ — பாஸ்’ அனுமதியுடன் 400 சுற்றுலா பயணியர் வந்து செல்ல அனுமதியுள்ளது. பூங்கா மாடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்ட தொட்டிகளில் காய்ந்த மற்றும் வாடிய 5000 மலர் தொட்டிகளை மாற்றி வண்ண மயமான மலர் தொட்டிகளை வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ‘சானிடைசர்’ வழங்குவதுடன் சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்து பூங்கா ஊழியர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது.