பிரதமர் மோடிக்கு, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது தனி பாசம். காடுகளில் தங்குவதையும் விரும்புவார் மோடி. இது குறித்து, டிஸ்கவரி சேனலில் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியும் வெளியானது. சமீபத்தில் தன் வீட்டில் மயிலுக்கு மோடி உணவளிக்கும், ‘வீடியோ’வெளியானது. இதை பலர் பாராட்டினாலும், சிலர் கடுமை யாக விமர்சனம் செய்தனர். விரைவில் இன்னொரு வீடியோ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பிரசாரகராக, 1980களில் பணியாற்றியுள்ளார் மோடி.
அப்போது உத்தர பிரதேசத்தில் பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார். இரவில் நதிக்கரை ஓரம் தங்கியுள்ளார். அப்போது தான் நீச்சல் கற்றுக் கொண்டாராம். மேலும், நதியில் உள்ள முதலைகளை பிடிப்பதையும் அப்போது கற்றுக்கொண்டாராம். மிகவும் ஆபத்தான இந்த விஷயத்தை கற்றுக் கொண்ட மோடி, முதலைகளோடு இருப்பது போன்ற வீடியோக்கள் உள்ளதாம்.
‘பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த வீடியோக்கள் வெளியாகும்’ என, பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது. வழக்கம் போல் இதுவும் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்படும்.