கொரோனா காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி சம்பாத்தியம்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு, 90 கோடி ரூபாய் வீதம் சம்பாதித்துஇருக்கிறார்.ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருண் இந்தியா வெளியிட்டிருக்கும், இந்திய பணக்காரர்கள் 2020 பட்டியல் குறித்த அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மூன்று மடங்கு அதிகம்மேலும் தொடர்ந்து 9 வது ஆண்டாக, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் எனும் பட்டத்தை, முகேஷ் அம்பானி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய சொத்து மதிப்பு, 2.77 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 6.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக, உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை திரட்டிய நிலையில், அவர் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்களாக 828 பேர் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.மேலும், 100 கோடி டாலருக்கும் அதிகமான, அதாவது இந்திய மதிப்பில், 7,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை, 179 ஆகும். இது, கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முன்று மடங்கு அதிகரிப்பாகும். இடம்பெறவில்லைமொத்தம் 828 பேர் கொண்ட இந்த பட்டியலில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 627 பேரின் சொத்துக்கள் அதிகரித்துள்ளன. 229 பேரின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. 75 பேர்கள், இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை.

முந்தைய பட்டியலில் இடம்பிடித்திருந்தவர்களில் 6 பேர் மரணமடைந்துவிட்டனர்.பெண்களைப் பொறுத்த வரை, 32 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா வி கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார்.இவரை அடுத்து, பயோகான் நிறுவனத்தை சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா, 31 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்த 828 பேர் பட்டியலில், 21 பேர், 40 வயதுக்கு கீழானவர்கள். இவர்களில், 17 பேர் சுயமாக சம்பாதித்து,முன்னுக்கு வந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்றுள்ள, 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு, 60.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, இதற்கு முந்தைய ஆண்டைவிட, 10.29 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள்ஹூருண் இந்தியா பணக்காரர்கள் 2020 பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 13 பேர் அரசியல் சார்ந்தவர்கள். நடிகை ஜெயாபச்சன், மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர பிரசாத், ராகுல் பஜாஜ், மும்பை பா.ஜ., தலைவர் மங்கள் பிரபாத் லோதா உள்ளிட்ட 13 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here