சாலை விபத்தில் கணவன், மனைவி பலி

கோத்தா திங்கி: இங்குள்ள ஜலான் ஜொகூர் பாரு-மெர்சிங்கில் கிலோ மீட்டர் 82.5 என்ற இடத்தில் லாரி டிரெய்லருடன் கார் மோதியதில் தம்பதியினர் கொல்லப்பட்டனர்.

29 வயதான சுஹைரி கட்வார்டி மற்றும் அவரது 32 வயது மனைவி நோர்பதிஹா மொஹமட் பசீர் ஆகியோர் ஃபெல்டா தெங்கரோ 4 இலிருந்து கோத்தா திங்கியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவர்கள் விபத்தில் மரணமடைந்ததாக கோத்தா திங்கி ஓசிபிடி சுப்ட் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (அக். 2) மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது. அந்த இடத்திற்கு வந்ததும், லோரி டிரைவர் மொஹமட் ருசுகி தஹார் 54, தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் சாலையில் சென்று அவர்களின் கார் மீது மோதியுள்ளார் என்று அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று (அக். 3) ஒரு அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், இந்த விபத்து லோரி சாலையின் இடதுபுறத்தில் நுழைந்ததால் ஏற்பட்டது என்றார்.

கணவர் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் லோரி டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here