மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களில் சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டு தோறும் தமிழக அரசு 20 விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த வருடத்திற்கான விருது டிசம்பர்3ம் தேதியில் அரசு சார்பில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும் எனவும். இந்த விருதினைப் பெற தற்போது விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா்,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்,
5, காமராஜா் சாலை
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்
சென்னை 600 005

என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர்20க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here