கார் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயம்

காஜாங்: ஒரு கார் மோசமாக யு-டர்ன் செய்ததில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

அக்., 5 ல் நடந்த சம்பவத்தில் எஸ்.எம்.கே. பண்டார் துன் ஹுசைன் ஓன் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் பூம் கேட் அருகே யு-டர்ன் செய்ய முயன்றது. நேராக சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

மோட்டார் சைக்கிளோட்டிக்கு காயம் ஏற்பட்டதோடு உடனருந்தவர் லேசாக காயமடைந்தார் என்று காஜாங் ஓசிபிடி உதவி ஆணையர் மொஹட் ஜைட் ஹாசன் புதன்கிழமை (அக். 7) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அக்., 6இல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் ஒரு போலீஸ் புகார்  செய்யப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் காவல்துறையினர் காரின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here