கேலிக்குப் பின்னால் இருப்பவர்களை அழைக்க போலீசார் முடிவு

சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை கேலி செய்ததாக ‘எம்ஜிஏஜி’ என்ற பேஸ்புக் கணக்கின் பின்னால் உள்ளவர்களைப் போலீசார் விசாரணைக்கு அழைக்கலாம் என்று நம்பப்டுகிறது.

சிரம்பான் செனாவாங்கில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஒரு விசாரணையைத் திறந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் (விசாரணை / சட்ட) டி.சி.பி மியோர் ஃபரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன, சம்பந்தப்பட்டவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509, தகவல் தொடர்புச் சட்டம் 1998 இன் பிரிவு 233  இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த் செவ்வாய்க்கிழமை டாக்டர் நூர் ஹிஷாம் தனது வீட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய படம் ‘இழிவான’ முறையில் திருத்தப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

படத்தைத் திருத்திய நபர் பின்னர் அதை அகற்றி மன்னிப்பு கேட்டார். இருப்பினும், அசல் இடுகையின் ஸ்கிரீன் ஷாட் ஏற்கனவே வைரலாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here