கோலசிலாங்கூரில் மொத்தம் 28 பகுதிகளில் அக்டோபர் 13 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் தடை ஏற்படும்.
பராமரிப்பு பணிகளுக்காகவும் உபகரணங்களும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செயவதற்காகவும் நீர் வழங்கல் தட செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
எதிர்கால நுகர்வோரின் வசதிக்காக தரத்தை உயர்த்துவதற்காக ஆயர் சிலாங்கூரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆலையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் இது அமையும் என்று அவர் கூறினார்.
சுங்கை சிரே எல்.ஆர்.ஏவிலிருந்து நுகர்வோர் வளாகத்தின் இருப்பிடத்தின் தூரம் , விநியோக அமைப்பின் நீர் அழுத்தத்தைப் பொறுத்து, நீர்வழங்கல் கால அளவு பகுதிக்கு ஏற்ப மாறுபடும்.
ஆயர் சிலாங்கூர் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு போதுமான நீர் விநியோகத்தை சேமித்து வைக்கவும், திட்டமிடப்பட்ட நீர் இடையூறு காலத்தில் கவனமாக தண்ணீரைப் பயன்படுத்தவும் அறிவுறுத்த விரும்புகிறது என்று அவர் கூறினார்.
மேலும் தகவலுக்கு, நுகர்வோர் www.airselangor.com இல் உள்ள ஆயர் சிலாங்கூர் வலைத்தளத்தையும்,ஆயர் சிலாங்கூர் பயன்பாடு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் பார்வையிடலாம். அல்லது 15300 என்ற எண்ணில்ஆயர் சிலாங்கூர் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.