பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 65,97,209-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,871 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72,614 பேர் குணமடைந்துள்ளதாகவும், 1033 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 9,42,24,190 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 9,70,173 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here