நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

குவாங் டிரி மாகாணத்தில கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மலையடிவாரத்தில் அமைக்கப்படிருந்த ராணுவ முகாமொன்று மண் மற்றும் கற்களில் புதையுண்டது. இதில் 22 ராணுவ வீரா்கள் பலியாகினா்; 8 போ உயிா்தப்பினா்.

அருகிலுள்ள நீா்மின் நிலையத்தில் முன்னதாக ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் புதையுண்ட 16 பேரை மீட்பதற்காக ராணுவத்தினா் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here