திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த அந்நிய நாட்டு ஆடவர் கைது

நேற்று காலை 5 மணியளவில் ஶ்ரீ பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் மற்றும் அவரது குழுவினர் ஜாலான் ராடின் பகுஸ் என்ற பகுதியில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பங்களாதேஷ் ஆடவரை நிறுத்தி சோதனை செய்தபோது திருட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி உள்ளிட்டபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

அவ்வாடவரை விசாரித்தபோது அவ்வட்டாரத்தில் பல கடைகளில் அவர் கொள்ளையிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் தங்குமிட இடத்திற்கு அழைத்து சென்றபோது குளியல் சோப்பு, 10 போத்தல் ஆயர் பானாஸ், 1 போத்தல் ஜின்வேரா, 3 போத்தல் வேசலைன் கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அவை அனைத்தும் சிறிய கடை மற்றும் உணவகத்தில் திருடப்பட்டது எனறும் 27 வயதான அந்த ஆடவரிடம் முறையான தஸ்தாவேஸ்கள் இல்லை என்பதால் குடிநுழைவு இலாகாவில் அந்நபரை ஒப்படைத்து அவருக்கு 14 நாட்கள் தடுப்புக் காவல் (19/10 – 2/11) வைக்கப்படுவார்.

செக்‌ஷன் 457 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 வருடம் சிறை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைருல்நிஷாம் பின் முகமட் ஜைனுடின் @ ஹல்மி கூறுகையில் பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர் என்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 03- 22979222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here