அதிர்ச்சியில் ஆழ்த்திய சிறுமியின் செயல்!

நாய்க்குட்டியை போல் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்து செல்லும் சிறுமி.

நம்மில் பலரும் வீடுகளில் நாய், பூனை, முயல் என பல வகையான செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு. நமது வீடுகளில் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டி செல்வதும் உண்டு. இந்நிலையில், மெக்சிக்கோவில் சிறுமி ஒருவர் புலிக்குட்டியை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

அந்த சிறுமி அந்த புலிக்குட்டியை, நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டி செல்வது போல புலிக்குட்டையையும் வாக்கிங் கூட்டி சென்றுள்ளார். சிறுமியின் இந்த செயலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரில் சென்ற ஒருவர், இதனை பார்த்த நிலையில், இதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here