கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் கரடி கடித்ததில் மீனவர் ரசூல் என்பவர் படுகாயம் அடைந்தார்.

விருந்தினர் மாளிகை அருகே சென்ற மீனவர் ரசூலை கை, கால் உள்ளிட்ட இடங்களில் கரடி கடித்து குதறியது. கரடியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் ராமச்சந்திரன் என்பவர் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் திடீர் அருவி ஒன்றும் உருவானது. இதனால் அங்கு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வர வந்து செல்வதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் யானை நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது மீனவர் ஒருவரை கரடி கடித்து குதறி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here