யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

சைத்ரா ரெட்டி

தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு நல்ல வருகிறது. ஏனெனில் வெள்ளித்திரை ரேஞ்சுக்கு ரொமான்ஸ், அடிதடி என கலக்கிக்கொண்டுள்ளது சின்னத்திரை. மேலும் லவ் ஸ்டேட்டஸ் கூட சின்னத்திரை நடிகர், நடிகைகளை வைத்தே பெரும்பாலும் எடிட் செய்கின்றனர். அந்த அளவிற்கு மக்களிடையே சீரியல்கள் பிரபலமடைந்துள்ளனர்.

மேலும் இதுநாள் வரை குடும்பம் அழுகை காட்சிகள் என இருந்து வந்த சீரியல்கள் லவ், ரொமான்ஸ் என எடுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சின்னத்திரையிலும் ஹீரோயினை விட வில்லிகள் கூட அழகாகவே தேர்ந்தெடுக்கபடுகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடிப்பவர் தான் சைத்ரா ரெட்டி.

கர்நாடகாவை சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு கன்னட சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தார் என்று கூட சொல்லலாம். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி ஷங்கர் விலகியதால் அவருக்கு பதிலாக நடித்திருந்தார்.

ஆனால் அது அவருக்கு அந்த அளவிற்கு புகழை தரவில்லை. அதன் பின் 2017 இல் ஒளிபரப்பப்பட்ட யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக அறிமுகமானார். இப்படியும் ஒரு வில்லி இருக்க முடியுமா?? என்ற ரேஞ்சில் நடித்திருந்தார். இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் favourite வில்லி என்ற அவார்ட்டையும் பெற்றார். தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. அதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைத்ரா ரெட்டி. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here