கமல் படத்துக்கு டைட்டிலை ரஜினிதான் வைத்தார்

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தெனாலி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் நகைச்சுவை படங்களில் கமல் நடிக்கும் நகைச்சுவை படங்கள் மட்டும் தனித்தன்மையோடு இருக்கும். அதற்கு மைக்கேல் மதன காமராஜன் முதல் பம்மல் கே சம்மந்தம் வரை ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அந்த பட்டியலில் மிக முக்கியமான இடம் தெனாலிக்கு உன்டு. இந்த படத்தில் கமல், ஜெயராம், தேவயானி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். எல்லாவற்றையும் கண்டு பயப்படும் இலங்கை தமிழராக கமல் தெனாலி ராமன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நேற்றோடு 20 ஆண்டுகளைக் கடந்துள்ளதை ஒட்டி சமூகவலைதளங்களில் பலரும அதை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கே எஸ் ரவிக்குமார் ‘இந்த படத்துக்கு தெனாலி என்ற பெயரை ரஜினிதான் பரிந்துரைத்தார்’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here