ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது

தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆயுதமாக நினைத்திருந்த நிலையில், ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் அது வெற்றுக் காகிதமாகி போனது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘தகவல் அறியும் உரிமை’ கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம்.

சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது.அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகாரவர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது. சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது? சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்?யாரிடம் தகவல்கேட்பது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here