24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 81,84,083 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 470 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,91,513 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 58,684 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,70,458 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here