‘கொட்டேஷன் கேங்’கில் இணைந்த சாரா

பிரியாமணி நடிப்பில் உருவாகும் படம் ‘கொட்டேஷன் கேங்’. இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்குகிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது. காயத்ரி சுரேஷ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.
இந்நிலையில், தெய்வத்திருமகள் படத்தில் நடித்து பிரபலமான பேபி சாரா, இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து, இயக்குனர் விவேக் கூறுகையில், “தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களின் மூலம் திறமையான நடிப்பில், கியூட்டான முகபாவங்கள் தந்து, அழகான சிறுபெண்ணாக அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட சாரா, கொட்டேஷன் கேங்கில், அனைவரையும் அதிரச் செய்யும் தைரியமிக்க இளம்பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here