மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ்கள் கொரோனாவை கொல்லும் திறனை கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய குடியரசில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அங்கு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கண்டுபிடிதுள்ளனர்.
வாயை சுத்தப்படுத்த உதவும் மவுத் வாஷ் லோஷன்கள் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


கார்டிப் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு முதல் கட்ட முடிவுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வின் படி மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் கொரோனாவை உடனே கொல்கிறது. கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொண்ட 30 நொடிகளில் அந்த வைரஸை மவுத் வாஷ் கொல்கிறது.
எப்படி


மவுத் வாஷ்களில் இருக்கும் சிபிசி எனப்படும் cetylpyridinium chloride (CPC) வேதிப்பொருள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மவுத் வாஷ்களில் 0.07 % க்கும் அதிகமாக சிபிசி இருந்தால் அது எளிதாக கொரோனாவை கொல்கிறது. கொரோனாவை கொல்லும் காரணியாக இது செயல்படுகிறது என்கிறார்கள்.
அந்த பல்கலைக்கழத்தில் இருக்கும் பேராசிரியர் டேவிட் தாமஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. Dentyl எனப்படும் நிறுவனத்தின் மவுத் வாஷில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஆய்வு கூட சோதனை ஆகும். ஆய்வு கூடத்தில் கொரோனாவை இந்த மவுத் வாஷ் கொன்றுள்ளது.