வாஷிங்டன்:
அமெரிக்க உணவு, மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக பைசர் தடுப்பூசி காத்திருக்கிறது.
இந்தநிலையில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் பைசர் தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தடுப்பூசிகளுடன் டஜன் கணக்கான சரக்கு விமானங்களும், நூற்றுக்கணக்கான லாரி பயணங்களும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வினியோகத் திட்டத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் விஸ்கான்சின் மாகாணங்களிலும் ஜெர்மனி பெல்ஜியத்திலும் சேமிப்பு தளங்களை நிறுவுவதும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.