கோலாலம்பூர் :
தனது வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு தோட்டாக்கள் அடங்கிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பு மூத்த சரவாக் சுங்க அதிகாரிக்கு மரண அச்சுறுத்தலாகப்பட்டது.
சுங்க இயக்குநர் ஜெனரல் டத்தோ செரி அப்துல் லத்தீப் அப்துல் காதிர், அக்டோபர் 21 முதல் நவம்பர் 13 வரை சரவாக்கிலுள்ள ராஜாங் துறைமுகம், பிந்துலு துறைமுகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் அந்த அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்ட உறையில், ‘மரணம்’ என்ற வார்த்தையும், சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்தது. மேலும் “இரண்டு தோட்டாக்களும் இருந்தன.
அந்த அதிகாரி தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு போலீஸ் அறிக்கையை பதிவு செய்துள்ளார், மேலும் அதே நாளில் விசாரணை நடத்த போலீசார் வீட்டிற்கு சென்றனர்.
அவரைப் பொறுத்தவரை, இதேபோன்ற குறிப்பு முன்னர் அதிகாரியின் முன் பக்கத்து வீட்டில் காணப்பட்டது. இக்கடித உறையும் அந்த அதிகாரிக்கானதாக இருக்கக்கூடும் என்பதையும் அவர் நிராகரிக்கவில்லை.
மூத்த அதிகாரியின் பக்கத்து வீட்டுக்காரர் ஓர் அறிக்கையை பதிவு செய்து, சுங்க அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து அறிவித்தார்.
இந்த பிரச்சினையை கையாள்வதில் போலீசார் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், விசாரணையில் உதவ மூன்று நபர்களை வெற்றிகரமாக தடுத்து வைத்ததற்கும் அப்துல் லத்தீப் நன்றி தெரிவித்தார்.
இறுக்கமான அமலாக்கத்தின் மூலம் சுங்கம் நாட்டின் பாதுகாப்பை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் எந்தவோர் உறுப்புக்கும் வரும் அச்சுறுத்தல்களுக்கும் சமரசம் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுங்க அதிகாரிகளுக்கு வரும் எந்த விதமான அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.