அமைச்சரின் விருந்துக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை!

மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

பாலிவுட் முன்னணி நடிகை வித்யாபாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு வித்யாபாலன் அங்கு சென்றிருந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்குs செல்ல வித்யாபாலன் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதித்தனர். இதனால் படப்பிடிப்பு குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், இரவு விருந்துக்கு வராததால் ஷூட்டிங் ரத்து என்ற செய்தியை அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார்.

 

கமெண்ட்: காக்கை உட்கார பனம்பழம்  விழுந்த கதையாக இருக்கிறதே!  முடிச்சு போட முகாமை வேண்டாமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here