பழயை கப்பலை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை- சோதனை வெற்றி!

கப்பலைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் தொடர்ந்து பலமாகி வரும் இந்தியா, அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்களை வாங்குவது மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களைத் தயாரிப்பது என பாதுகாப்புத்துறை பலப்படுத்தப்படுகிறது.

இதனிடையே, ரஷ்யாவுடன் இணைந்து நிலம், விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து ஏவக்கூடிய, ‘பிரமோஸ்’ ஏவுகணைகளை, இந்தியா உருவாக்கி வருகிறது.

ஒலியை விட மூன்று மடங்கு வேகம், அதிக செயல்திறன் கொண்ட ஏவுகணைகளின் சோதனைகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் , வங்காள விரிகுடா கடற்பகுதியில் , கடற்படையினர் பிரமோஸ் ஏவுகணை சோதனையை  வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் .

கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை, ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here