மின் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அணு உலைகள் உலகம் முழுவதும் அமைக்கப்படுகின்றன. அவற்றின் பலன்களும் இழப்புகளும் அடிக்கடி விவாதிக்கப்படுவது வழக்கம்.
வழக்கமாக அணுத்துகள் பிளவுகள் மூலம் அணு உலைகள் இயங்கும். அதற்கு மாறாக அணுத் துகள்களை பிணைப்பதன் மூலம் ஆற்றலைப் பெற முடியும் என சீனாவில் கண்டறியப் பட்டுள்ளது.
அதன் விளைவாக சீனாவில் செங்கடுக்கு அருகே நியூக்களியர் கார்ப்பரேஷனில் அணுக்கரு பிணைப்பு உலையை அமைத்தனர். அதில்தான் சூரியனை விடவும் அதிக வெப்பம் தருவது தொடங்கியிருக்கிறது.
இதன்மூலம் கதிர்வீச்சு வெளிப்படாது, அணுக்கழிவுகள் வராது என்றும் கூறப்படுகிறது. இதைப் போலவே மற்ற நாடுகளிலும் அணுக்கரு பிணைப்பு உலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.