சிறந்த நபர்களில் ஒருவர் ஜோ பிடன்- மற்றொருவர் ? டைம் இதழ் தேர்வு

உலகின் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று டைம் இதழ். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் டைம் இதழின் வாசகர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள்.

வாரம் ஒருமுறை வெளியாகும் டைம் இதழுக்கு சுமார் 25 மில்லியன் வாசகர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் டைம் இதழ் இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

டைம் இதழ் ஒவ்வோர் ஆண்டும், அந்த ஆண்டின் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அது அந்த ஆண்டின் அந்த நபர்களின் செயற்பாடு, ஊடகங்கள் அவர்களைப் பொருட்படுத்துவது, அவர்களைப் பற்றிய செய்திகள் எவ்வளவு நபர்கள் விரும்பி படிக்கிறார்கள் உள்பட பல்வேறு காரணங்களின் அடிப்படியில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் சிறந்த நபர்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருபவர்களில் ஒருவர் அமெரிக்காவின அடுத்த அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் ஜோ பிடன்.

வழக்கமாக, அமெரிக்காவில் ஒருவர் அதிபரானால், அவரே இரு முறை அதிபராக நீடிக்கும் வகையில் அடுத்த தேர்தலில் வெல்வார். ஆனால், ட்ரம்பை தேர்தலில் தோற்கடித்து அதிபராகி இருக்கிறார் ஜோ பைடன்.

டைம் இதழ் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்திருக்கும் இன்னொரு நபர் கமலா ஹாரீஸ். இந்தியாவை அதுவும் தமிழ்நாட்டின் மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹாரீஸ். அவரின் தாய் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்.

கமலா ஹாரீஸ் துணை அதிபருக்குப் போட்டியிடும்போதே இந்தியாவில் அவருக்கு ஆதரவு இருந்தது. வெற்றி பெற்றதும் பெரிதும்கொண்டாடினார்கள். தற்போது டைம் இதழின் அறிவிப்பு அவர்களை இன்னும் மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here