சீன ஆண்களுக்கு விற்கப்படும் சிறுபான்மையின பெண்கள்!

சீன ஆண்களுக்கு செக்ஸ் அடிமைகளாகவும், மணப்பெண்களாகவும் பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்கள் விற்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் டி பிரவுன்பேக், ”பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்கள், பெரும்பாலும் கிறிஸ்துவர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இந்துபெண்கள் ஆகியோர்தான் சீன ஆண்களுக்கு செக்ஸ் அடிமைகளாக இருப்பதற்கும், கட்டாய மணப்பெண்களாக இருப்பதற்கும் விற்கப்படுகிறார்கள்.

அப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களை கொஞ்ச நாள் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார்கள்.

பாக்கிஸ்தானில் வறுமையில் வாடும் சிறுபான்மை இனத்தவர்களைத்தான் கடத்தல் காரர்கள் குறிவைக்கிறார்கள். குடும்பத்திற்கும், உறவினர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிடுவதால் அவர்களே கடத்தல்காரர்களுடன் அனுப்பி விடுகிறார்கள்.

கடந்த 2019 ஆண்டு வரையிலும் 629 பெண்கள் பாக்கிஸ்தானில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டுள்ளனர்’ என்று சொல்லி அதிரவைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here