சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என மூன்று வகைப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் ஏற்கனவே ஜூன் 21 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதன் படி இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 7:03 மணியளவில் தொடங்கி சரியாக மறுநாள் (டிசம்பர் 15 ஆம் தேதி) 12:23 அதிகாலையளவில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 9:43 மணியளவில் சூரிய கிரகணம் உச்ச நிலையில் இருக்கும் என்றும், சுமார் ஐந்து மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.