ஆதரவு தருகின்றவர்களுக்கே ஆதரவு- நாட்டுப்புறக் கலைஞர்கள் தீர்மானம்

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க கூட்டமைப்பு, விழுப்புரம் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து சங்கர தாஸ் சுவாமிகளின் 98ஆம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் 12-ஆவது மாவட்ட மாநாட்டை நடத்தியது.

இம்மாநாட்டையொட்டி காணையில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் இருந்து நாட்டுப்புற கலை ஞர்களின் பேரணி புறப்பட்டது. இப்பேரணியை முத்தமிழ்செல்வன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் இசை, நாடகம், தெருக் கூத்து, கரகாட்டம், நையாண்டி மேளம், தார தப்பட்டை, நாட்டுப்புற பாடல், கோலாட்ட கும்மி,பஜனை, ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், பம்பை, உடுக்கை,குறவன் குறத்தி, கைசிலம்பு போன்ற 45க்கும் மேற்பட்ட கலைப் பிரிவுகளைச் சேர்ந்த ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக காணை சுபா திருமண மண்டபத்தை வந்தடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார்.

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கியமான அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களின் ஆண்டுவருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.82 ஆயிரமாக மாற்றியமைக்க வேண்டும், ஆண்டுதோறும் கலை பண்பாட்டுத்துறை மூலம்வழங்கப்பட்டு வரும் கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர்மணி, கலைஞர் நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள் பெறும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பொற்கிழி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், நாடக மன்றங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க குறைந்த வட்டியில் மானிய கடன் பெற வழிவகை செய்ய வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுப்புற கலைகளைப் பயில பயிற்சி பள்ளி தொடங்க வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, இல்லையேல் ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்களும் சட்டமன்ற தேர்தலைபுறக்கணிப்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here