புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்றுக் காலை ஒரு விசைப்படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில், நேற்றிவு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 4 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

மேலும், மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு இழுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், அவர்களை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் தூத்துக்குடியைச் சேர்ந்த 36 மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படை, தற்போது மேலும் 4 பேரை கைதுசெய்திருப்பது, தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,

Dailyhunt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here