வாஷிங்டன்-
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என கடந்த மார்ச் 11- ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு இன்று வரை 16.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 7.56 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 1.74 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 3.13 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகர மேயர் முரியல் பவுசர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வாஷிங்டன் டி.சி. நகரில் வரும் 23- ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி காலை 5 மணிவரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை விதித்து மேயர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல், நகரில் அவசர நிலை, பொது சுகாதார நெருக்கடி நிலை வரும் 2021- ஆம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.