வான்கோழிக்கு இரண்டரை லட்சம் செலவாம்! – அமெரிக்காவில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏதோ வான்கோழியை மன்னித்தார் என்று செய்திகள் வருகின்றனவே? அந்த வான்கோழி அப்படி என்னதான் தீங்கு செய்தது?

வான்கோழிகளுக்கு அமெரிக்காவிலும் வாக்குரிமை இல்லை. எனவே அது டிரம்புக்கு எந்த தீங்கும் செய்யவில்லை.

நம்மூர் பொங்கல் மாதிரி அமெரிக்காவிலும் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுவதுண்டு. அதைத் தொடர்ந்து ‘தேங்க்ஸ் கிவிங்’ என்றொரு நாள் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அமெரிக்காவில் ‘தேங்க்ஸ் கிவிங்’ நாளில் அமெரிக்கர்கள் வீட்டு மெனுவில் வான்கோழி வறுவல் கட்டாயம் இடம்பெறும். இந்த ஒரே நாளில் சுமார் ஐந்து கோடி வான்கோழியை கசாப்பு போடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். அந்நாளில் அமெரிக்க அதிபருக்கு ஒரு வான்கோழியை அமெரிக்கர்கள் சார்பாக வழங்குவார்கள்.

அந்தக் கோழியை பிரியாணி போட்டு குடும்பத்தோடு அதிபர் ஒரு கட்டு கட்டுவது வழக்கம்.

1963ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜான் கென்னடி இந்த வழக்கத்தை மாற்றினார். தனக்குp பரிசாக வழங்கப்பட்ட வான்கோழியை மன்னித்து விடுதலை செய்தார்.

அவருக்குப் பின்வந்த சில அதிபர்கள் இம்மாதிரி வான்கோழியை மன்னிக்கத் தொடங்கினார்கள். வான்கோழியை மன்னிப்பதையே வருடத்துக்கு ஒரு முறை அதிபர் செய்யும் சடங்காக ஆக்கிவிட்டார்கள்.

டிரம்ப் கொஞ்சம் மாறானவர்  என்றாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக வான்கோழியை மன்னிக்கத் தவறவில்லை. அடுத்த ஆண்டு ஜோ பிடன், இதே மாதிரி வான்கோழியைப் மன்னிப்பாரா?

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதுபோல அதிபருக்கு பரிசாக வழங்கப்படும் வான்கோழி ரொம்பவே மதிப்பனதாம்.

பரிசாக வழங்கப்படும் முன்னர் நட்சத்திர ஓட்டலில் வைத்து அந்த வான்கோழிக்கு ராஜ உபச்சாரம் நடக்குமாம். நட்சத்திர ஓட்டலின் சொகுசு அறையில் தங்கும் வான்கோழிக்கு, ஒரு தினத்துக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவழிப்பார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here