ரஜினியையும், கமலையும் அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் -சீமான் ஆவேசம்!

அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்ஜிஆர் . அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடிஎம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால், அதிமுகவின் இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போடுவார்கள். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார்.

தேர்தலில் ரஜினி கமலுக்கு கிடைக்கும் கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் வேறு விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் ” என்றார்  சீமான்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள ரஜினியும் , கமலும் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார்கள். எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான்; எம்ஜிஆர் எங்கள் சொத்து என தேர்தல் பரப்புரையில் கமல் ஹாசன் எம்ஜிஆர் பற்றி பேசி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here