சூப்பாக்கி சூட்டில் 4 கொள்ளையர்கள் பலி

சுங்கை பூலோ: தப்பி ஓடும் போது நான்கு கொள்ளையர்கள் உணவு விநியோகர் மீது இரண்டு முறை மோதியதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) மதியம் 12 மணியளவில், ராவாங்கில் ஒரு வீட்டுப் பகுதியில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீசாருக்கு அழைப்பு வந்தது.

மதியம் 1 மணியளவில், ஒரு போலீஸ் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு ஏற்ற ஒரு காரைக் கண்டது. கார் ஓட்டுநர் போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்தபோது ஒரு துரத்தல் ஏற்பட்டது. துரத்தும்போது, ​​சந்தேக நபரின் கார் உணவு விநியோகர் ஒருவரை மோதி தள்ளியது.

கார் விபத்தில் சிக்கியதால் போலீஸ்காரரின் கவனம்  அவர் மீது திரும்பியது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் டத்தோ அர்ஜுனைடி  முகமட் கூறினார்.

சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்படவிருந்தபோது போலீஸ் குழுவை தாக்க முயன்றார். தங்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி கொள்ள நான்கு சந்தேக நபர்களும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குறைந்தது 50 கொள்ளைகளுடன் இந்த குழு ஏற்கனவே சம்பந்தப்பட்டிருப்பதாக  தெரிய வந்துள்ளன. அவர்கள் சிலாங்கூரைச் சுற்றி செயலில் இருப்பதாக அறியப்பட்டது. சந்தேக நபர்களில் இருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  44 வயதானவர்  தனித்து வாழும் தாய் என்றும், போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிருடன் இருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது தற்போதைய நிலை இன்னும் அறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here