வாஷிங்டன்-
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர் லூக் லெட்லோ.
இவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த 18- ஆம் தேதி லூக் லெட்லோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த 23- ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை லூக் லெட்லோ, உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு, லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.